அனுமதியின்றி மாடு கொண்டு சென்ற இருவர் கைது.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று (2) இரவு மாட்டுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுமதி பத்திரமின்றி இறைச்சிக்காக சட்டவிரோதமாக மாட்டை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதாகக் கூறப்படும் இருவரை, மருதங்கேணி பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை பொலிஸ் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கெலும் பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவே மேற்கொண்ட சோதனையின் போது, அனுமதி பத்திரமின்றி மாட்டை ஏற்றி சென்றிருந்தது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.