உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற வருடாந்த மாசிமக விரதம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் – தென்மராட்சி – மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலய மாசிமக விரத உற்சவம் நேற்றுத் திங்கட்கிழமை (02.03.2026) சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்றது.

காலை விசேட பொங்கலைத் தொடர்ந்து முற்பகல் 11.30 மணியளவில் வைரவப் பெருமானுக்கு விசேட அபிஷேகம் ஆரம்பமாகியது. பிற்பகல் 01.15 மணியளவில் விசேட பூஜை, மடை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.

மேற்படி ஆலயப் பிரதமகுரு நடேசன் குகநாதன் மாசிமக விரத உற்சவக் கிரியைகளைச் சிறப்புற நிகழ்த்தினார்.

இதேவேளை, கிராமிய வழிபாடு இன்றுவரை அழியாது பின்பற்றப்பட்டு வருகின்ற ஈழத்து ஆலயங்களில் இவ் ஆலயமும் ஒன்றாகத் திகழ்கின்றது.

வயல்களின் நடுவே சிறியதொரு ஆலயமாக இயற்கை அழகுற அமைந்துள்ள இவ் ஆலயத்தில் நித்திய பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருவதுடன் வருடாந்தம் மாசிமக விரத உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0