உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரான் மீதான தொடர் தாக்குதல் ஐ.நா. சாசனத்தை மீறும் செயல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஈரான் மீதான தொடர் தாக்குதலானது சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தையும் அப்பட்டமாக மீறும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஈரான் மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார். அதேவேளை ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் முன்னெடுத்த தாக்குதல்களையும் தாம் கண்டிப்பதாகக் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தின் அமைதியைக் குலைக்கும் எந்தவொரு வன்முறை நடவடிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார்.

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரம், அந்நியச் செலாவணி மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் ஏற்படவுள்ள பாரதூரமான தாக்கங்கள் குறித்து அவர் சபையில் கவலை வெளியிட்டார்.

இப்பிரச்சினையைச் கையாள்வதற்குத் தேசிய ரீதியிலான ஒருமித்த கருத்து அவசியம் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உடனடி விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கான அழைப்பை ஜனாதிபதி விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து அரசியல் கட்சிகளும் இதில் பங்கேற்று, நாட்டின் நலன் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0