விபத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு.!
வெலிப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம – மத்துகம வீதியின் 4ஆம் மைல்கல் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (02) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மத்துகமயிலிருந்து அளுத்கம நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று, அதேதிசையில் முன்னால் பயணித்த மற்றுமொரு உந்துருளியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதன்போது, விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுனரான பெண், சீனவத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
விபத்தை ஏற்படுத்திய உந்துருளி தப்பிச் செல்ல முயன்ற போது, முன்னால் சென்ற மற்றுமொரு உந்துருளியுடன் மோதி மீண்டும் விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த குறித்த ஓட்டுனர் தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிப்பனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.