உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தொழிலாளர்களைப் பாதுகாக்க அநுர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – சஜித் வலியுறுத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் சிக்கியுள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உச்சகட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரம், ரன்கெத்தகம பகுதியில் இன்று மாணவர்களுக்குப் பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு :-

“நமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முதுகெலும்பாகத் திகழும் பல இலட்சம் தொழிலாளர்கள் மத்திய கிழக்கில் பணிபுரிகின்றனர். தற்போது அங்கு மூண்டுள்ள மோதலால் அவர்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு ‘மூச்சு’ தரும் அந்த மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.

ரணசிங்க பிரேமதாஸவால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைச் சீருடை மற்றும் மதிய உணவுத் திட்டங்கள் இன்று முறையாகச் செயற்படுத்தப்படவில்லை.பிள்ளைகளுக்குச் சரியான கல்வியுடன், அறநெறிப் பண்புகளையும் சமச்சீரான உணவையும் வழங்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா தருவோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், இன்று 120 ரூபாவைக் கூட வழங்கவில்லை.80 ரூபாவுக்கு நெல்லை விற்பனை செய்வதால் விவசாயிகள் தமது உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் தவிக்கின்றனர். இதற்கான தீர்வை வழங்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனப் பொறுப்பற்ற விதத்தில் அமைச்சர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் வறுமை அதிகரித்துள்ள சூழலில், அரசு நிலக்கரி இறக்குமதியிலும் முறைகேடுகளைச் செய்கின்றது. நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட 10 கப்பல் நிலக்கரியும் தரமற்றவை. இதனால் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போயுள்ளது. இதனை அமைச்சர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆளும் தரப்பு அமைச்சர்கள் மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் செயற்படுகின்றனர். பௌத்த மதத்துக்கு முன்னுரிமை அளிக்கும் அரசமைப்புச் சட்டம் குறித்துப் போதிய தெளிவில்லாத ஒரு குழுவினர் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

57 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

71 0 0