வாழைச்சேனை கிராமப் பெயர் மாற்றம் விவகாரம் – அரசியல் சர்ச்சை தீவிரம்.!
வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று (03.02.2026) “கொண்டையங்கேணி முஸ்லிம் கிராமம்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட கருத்தில், தமிழர்களின் பூர்வீக கிராமப் பெயர்களை மாற்றி, எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் வேறு சமூகத்தினர் வாழ்ந்ததாக காட்டும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், “கல்குடா” என்ற பெயர் பயன்படுத்தப்படுவது தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்கள் பிரதேசங்களில் மட்டுமே செயல்பட வேண்டும்எனவும் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு இனத்தின் மொழி, அடையாளம் மற்றும் முகவரி மாற்றப்படுவது தொடர்பான விடயங்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு தெளிவான நிலைப்பாட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.