உள்நாட்டு இறைவரித் திருத்தம் அமுலில் – புதிய விதிமுறைகள் அறிவிப்பு.!
தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையடுத்து, இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வங்கிக் கணக்குகளைத் திறப்பது, கட்டிட வரைபடங்களுக்கு அனுமதி பெறுவது, மோட்டார் வாகனப் பதிவு மற்றும் வாகன அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல், காணி அல்லது காணி உரிமப் பதிவு, வணிகப் பதிவு நடவடிக்கைகள், இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குப் பரிமாற்றம், கடன் அட்டைகள் பெறுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் சமர்ப்பிப்பது அவசியமாகும்.இந்த நடைமுறை மூலம் வரி நிர்வாகத்தை மேலும் ஒழுங்குபடுத்தவும், நிதி பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் எதிர்பார்க்கப்படுகின்றது.