உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையர்களை உடனடி வெளியேற்றம் சாத்தியமில்லை – அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக அப்பகுதியிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கிருந்து இலங்கையர்களை உடனடியாக வெளியேற்றுவது தற்போது சாத்தியமில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இன்று (02) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 10 இலட்சம் இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அப்பிராந்தியத்தில் செயல்படும் இலங்கையின் இராஜதந்திரப் பணிகள் நிலைமைகளை நெருக்கமாகக் கண்காணித்து வருவதுடன், தேவையான உதவிகளை வழங்க தயாராக உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில், தற்போது இலங்கையில் தங்கியுள்ள பயணிகளின் விசாக்களை இரண்டு வாரங்களுக்கு இலவசமாக நீட்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நீட்டிப்பு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும். எதிர்கால முன்னேற்றங்களைப் பொருத்து இந்த முடிவு மீண்டும் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


சொந்த நாடுகளுக்கு திரும்ப விரும்பும் பயணிகளுக்காக மாற்று விமான வழிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், அவசரகால நிலையை மீண்டும் நீடிப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கான பிரேரணை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0