உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்; அவசர கூட்டத்துக்கு சஜித் அழைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அவசர விசேட கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள் வருமாறு,
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக, அங்கு பணிபுரியும் இலட்சக்கணக்கான இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்க வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தமது ஆலோசனைகளை முன்வைக்கவுள்ளன.

இந்த மோதல்கள் காரணமாக எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்படும்.

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தின் முடிவில், மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவுபடுத்தவும், உரிய அழுத்தங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடி இலங்கைக்குப் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்றுகூடல் அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

55 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

62 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

69 0 0