உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகை; இரு வாரங்களுக்கு விசா காலம் நீடிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் விமானப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையை விட்டு வெளியேற முடியாமல் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க அரசு தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

“விமானப் போக்குவரத்து இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள், காலாவதியான விசா காரணமாக சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு வார கால விசா நீடிப்புக்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது.” – என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக பல சர்வதேச விமான நிறுவனங்கள் தமது சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதனால் இலங்கைக்கு சுற்றுலா வந்த மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வந்திருந்த வெளிநாட்டவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களுக்கான நிவாரணமாகவே இந்தத் தீர்மானம் அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ளது.

விசா காலத்தை நீடிப்பதன் மூலம் வெளிநாட்டவர்கள் சட்டபூர்வமாக நாட்டில் தங்கியிருக்க முடியும் என்றும், அவர்களுக்குத் தேவையான மேலதிக உதவிகளை வழங்க குடிவரவு குடியகல்வு திணைக்களம் தயாராக உள்ளது என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

51 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0