உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் கோரி இலங்கை அரசு அதிரடி அழைப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

“மத்திய கிழக்கில் மூண்டுள்ள போர் உடனடியாக நிறுத்தப்பட்டு, உலக அமைதி நிலைநாட்டப்பட வேண்டும்” என்று இலங்கை அரசு, சர்வதேச சமூகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இலங்கையின் இந்தத் தீர்க்கமான நிலைப்பாட்டை அறிவித்தார்.

அவர் வெளியிட்ட முக்கிய கருத்துக்கள் வருமாறு,
“எந்த இடத்தில் நடந்தாலும், எவர் நடத்தினாலும் போரை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதே இந்த அரசின் கொள்கை. போரால் விளைவது உயிரிழப்புகளும், சொத்துச் சேதங்களும் மாத்திரமே. எனவே, உலக அமைதிக்காக இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

மத்திய கிழக்கில் நிலவும் இந்த அசாதாரண சூழல், உலக அமைதியைக் குலைப்பதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலகப் பொருளாதாரத்தில் பாரிய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும்.” – என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அமைச்சர்,
“அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்கவும் வெளிவிவகார அமைச்சு ஊடாகத் தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் அரசு விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கிடையிலான மோதல்கள் இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதையே இலங்கை விரும்புகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

55 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

62 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

48 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

69 0 0