உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

நாட்டில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற இருவேறு உந்துருளி விபத்துக்களில் சிக்கி பெண் ஒருவரும் ஆணொருவரும் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுபோவில – தெஹிவளை வீதியில் களுபோவில பகுதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின.

தெஹிவளை நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று மற்றுமொரு வீதிக்கு திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த உந்துருளியுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் இரு உந்துருளி ஓட்டுநர்களும், ஒரு உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்தவரும் படுகாயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், 49 வயதுடைய தெஹிவளை பகுதியைச் சேர்ந்த உந்துருளி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், மதவாச்சி – கெபித்திகொல்லேவ வீதியின் ஹீரல்லுகம பகுதியில் இரு உந்துருளிகள் மோதி மற்றுமொரு விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹீரல்லுகம நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று எதிரே வந்த உந்துருளியுடன் மோதியதில், பெண் ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கெபித்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 43 வயதுடைய எடவீரகொல்லேவ பகுதியைச் சேர்ந்த பெண் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

51 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0