உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சிவனொளிபாதமலையில் போதைப்பொருட்களுடன் ஆறு இளைஞர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வந்த ஆறு இளைஞர்கள் பல்வேறு போதைப்பொருட்களுடன் நேற்று நல்லத்தண்ணி நகரில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 33 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், மொறட்டுவை, மாத்தறை, பாயாகலை, வங்கதெனிய, ஹக்மனை மற்றும் மீகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கஞ்சா, ஐஸ், போதை மாத்திரைகள் மற்றும் சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டதாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.சந்தேகநபர்களை ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்ரீகர்களில் சந்தேகத்திற்கு இடமானவர்களை நல்லத்தண்ணி பொலிஸார் தொடர்ந்து தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

55 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

62 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

70 0 0