உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கிண்ணியாவில் விதிமுறை மீறிய வாகனங்களுக்கு அபராத நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகரப் பகுதியில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கிண்ணியா போக்குவரத்து பொலிஸார் இன்று விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


புனித ரமலான் காலம் என்பதால் கிண்ணியா பிரதான வீதியில் பொதுமக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. குறுகிய அகலத்தினால் இப்பாதையில் அடிக்கடி சன நெரிசலும், நீண்ட வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகின்றன. இதனை ஒழுங்குபடுத்தும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


குறிப்பாக, பிரதான வீதியில் வாகன நிறுத்தத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றை நாள் – இரட்டை நாள் முறையை பின்பற்றாத சாரதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நடவடிக்கையின் காரணமாக கிண்ணியா நகரின் போக்குவரத்து நிலைமை இன்று ஓரளவுக்கு சீராகக் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

51 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0