உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மனைவியை கொ*லை செய்த கணவன்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

தனது மனைவியை கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவனைக் கைது செய்வதற்காக மாரவில பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மாரவில, கட்டுநேரிய – பேன்கட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீடொன்றில் இடம்பெற்ற கொலை தொடர்பில் நேற்று (01) இரவு 11.40 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, உயிரிழந்த பெண்ணின் சடலம் வீட்டின் படுக்கையறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளதாகவும், சந்தேகநபரான கணவன் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பியோடியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

58 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0