உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

எரிபொருளை கொள்கலன்களில் சேகரிக்கத் தடை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தொடர்ந்து, பொதுமக்கள் எரிபொருளை முறையற்ற வகையில் சேமிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு புதிய கட்டுப்பாடுகளை இலங்கைப் பொலிஸார் விதித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,

நாட்டுக்குள் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, தட்டுப்பாடு ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்தில் பொதுமக்கள் எரிபொருளை அதிகளவில் சேமிக்கத் தேவையில்லை என்று பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சில தரப்பினர் திட்டமிட்ட முறையில் கலன்கள் மற்றும் போத்தல்களில் எரிபொருளைச் சேகரித்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மீள் அறிவித்தல் வரும் வரை பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன:

மீன்பிடிப் படகுகள், தொழிற்சாலைகள், விவசாய நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய வீட்டுத் தேவைகள் தவிர, ஏனைய தேவைகளுக்காகக் கலன்கள் அல்லது கொள்கலன்களுக்கு எரிபொருள் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருளைச் சட்டவிரோதமாகக் களஞ்சியப்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை, சமூக வலைத்தளங்கள் ஊடாக எரிபொருள் தட்டுப்பாடு குறித்துப் போலிப் பிரசாரங்களை முன்னெடுக்கும் நபர்கள் அல்லது குழுக்களைக் கண்டறியப் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொதுமக்கள் வழமை போன்று தமது தேவைகளுக்காக மாத்திரம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறும், தேவையற்ற பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

58 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0