உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஓய்வுபெற்ற ஜேர்மன் விமானி நீர்கொழும்பில் மர்மமாக உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் அறையினுள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஓய்வுபெற்ற ஜேர்மன் நாட்டு விமானியின் மரணம் தொடர்பில், பிரேத பரிசோதனை நடத்தி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதிவான் ரகித அபேசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

ஏத்துக்கால, புனித செபஸ்தியான் வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதிக்கு நேற்று நேரில் சென்ற நீதிவான், அங்கு ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதனைத் தொடர்ந்து, சடலத்தை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரதான சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்து பிரேத பரிசோதனை முன்னெடுக்குமாறு நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அவர் பணிப்புரை விடுத்தார். இதன்போது சட்ட வைத்திய அதிகாரி ஐ.எம். திப்பட்வாவவும் சம்பவ இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பெலாடி அக்மட் ஜோகிம் (வயது 70) எனப்படும் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கடந்த சில வருடங்களாக இலங்கையில் வசித்து வந்துள்ளார்.

முன்னதாக இலங்கைப் பெண் ஒருவரைத் திருமணம் செய்திருந்த இவர், பின்னர் அவரிடமிருந்து சட்டரீதியாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்த மரணத்துகான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ள பொலிஸார், நீர்கொழும்பு தலைமையக பொலிஸாரின் ஊடாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

58 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0