உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பெருமளவான சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவர் சிக்கினார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட பெருந்தொகையான சிகரெட்டுகளுடன் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று சனிக்கிழமை இரவு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினர் விசேட சோதனையொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய இளைஞன் ஒருவரை வழிமறித்துச் சோதனை செய்தபோது இக்கடத்தல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சந்தேகநபரின் உடைமைகளைச் சோதனையிட்டபோது, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வரப்பட்ட சுமார் 36 ஆயிரம் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இவை அனைத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அப்பலபிட்டிய பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வெளிநாட்டிலிருந்து இந்தச் சிகரெட் தொகுதியைக் கொண்டு வந்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமும், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகுதிகள் தொடர்பிலும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

58 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0