உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகள் 25 ஆம் திகதிக்கு பின்னரே ஆரம்பிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச் – 25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று கல்முனையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த மாணவர்களின் நலன் கருதி இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிந்த கையோடு உடனடியாகவே க.பொ.த. உயர்தரத்திற்கான புதிய வகுப்புகளை ஆரம்பிக்க சில தனியார் கல்வி நிலையங்கள் ஏட்டிக்குப் போட்டியாக முனைவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இது விடயமாக ஏலவே சொல்லப்பட்ட ஆலோசனைகளை குறித்த கல்வி நிலையங்கள் பொருட்படுத்தாமல், உதாசீனமாக செயற்படுவதானது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகையினால் இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபையானது இவ்வறிவுறுத்தலை விடுப்பதுடன் இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது – என்று ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

58 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

43 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0