உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

நேபாளத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து .!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
46 பார்வைகள்

நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.நேபாளத்தில் இன்று (23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்த பேருந்தில் பயணிகள் 44 பேர் இருந்தனர்.

பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டர்.இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்ததுடன் அவர்களில் ஆறு பெண்கள் மற்றும் பதினொரு ஆண்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மேலும் 8 பெண்கள், 18 ஆண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 27 பேர் காயமடைந்தனர். இவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். பஸ் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது எனவும் வாகனம் ஓட்டுபவர் , தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0