கொட்டகலையில் நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு.!
கொட்டகலையில் நிவாரணப் பொதிகள் வழங்கும் விசேட நிகழ்வு கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் திரு.புஸ்பா விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்றது.
அவுஸ்திரேலியா தமிழ் சங்கத்தின் பூரண அனுசரணையில், கொட்டகலை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் சுவாமி தேவஸ்தான கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்திற்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்ணான்டோ கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பொதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வு கொட்டகலை பிரதேச சபை உறுப்பினரும் கொட்டகலை நகர் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவருமான கௌரவ விஸ்வநாதன் புஸ்பா அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நுவரெலியா தமிழ் இசைக் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோடு, திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





