உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

வவுனியா, பறங்கியாற்றுப் பகுதியில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று மாலை ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பறங்கியாற்றுப் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

நேற்று அதிகாலை வேளையில் பறங்கியாற்றுப் பகுதிக்குச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த குடும்பத்தினர், அயலவர்களுடன் இணைந்து அப்பகுதி முழுவதும் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது, ஆற்றினுள் குறித்த நபர் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண பரிசோதனை மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் தற்செயலாக ஆற்றில் விழுந்து உயிரிழந்தாரா? அல்லது வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பியில் (Electric Trap) சிக்குண்டு உயிரிழந்தாரா? என்ற கோணத்தில் ஈச்சங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

44 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

53 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

71 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

55 0 0