உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் லண்டன் சென்றடைந்தார் நாமல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
25 பார்வைகள்

புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தமிழ் மாணவர் சங்கங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு லண்டன் சென்றடைந்துள்ளார்.

லண்டன் பௌத்த விஹாரையின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அவர் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

கேம்பிரிட்ஜ் உரை இரத்து
முன்னதாக, பிரித்தானியாவின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யூனியனில் நாமல் ராஜபக்ஷ நிகழ்த்தவிருந்த விசேட உரை, பாதுகாப்பு காரணங்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் தொடர் போராட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக இரத்துச் செய்யப்பட்டது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கேம்பிரிட்ஜ் யூனியன், “தற்போதைய சூழலில் இருதரப்பு சமநிலையான விவாதத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை” எனத் தெரிவித்திருந்தது.

ஒக்ஸ்போர்ட் உரை நடைபெறுமா?
கேம்பிரிட்ஜ் நிகழ்வு இரத்தான போதிலும், திட்டமிட்டபடி ஒக்ஸ்போர்ட் யூனியனில் அவர் ஆற்றவிருக்கும் உரையும், லண்டனில் வசிக்கும் இலங்கைச் சமூகத்துடனான சந்திப்புகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், ஒக்ஸ்போர்ட் யூனியன் முன்பாகவும் போராட்டங்களை முன்னெடுக்கத் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளதால் அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
நாமலினுடைய இந்தப் பயணத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர் மிலிந்த ராஜபக்ஷ ஆகியோரும் இணைந்து கொண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0