உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
36 பார்வைகள்

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு நேற்றையதினம் இரவு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக இரண்டு பாரவூர்திகள் மற்றும் இரண்டு உழவு இயந்திரங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த கல்லாறு பகுதியில் வன விலங்குகள் மற்றும் பறவைகள் சரணாலயம் காணப்படுவதன் காரணமாக அப்பகுதியில் மணல் அகழ்வு முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பகுதியில் சிலர் சட்டவிரோதமான முறையில் இரவு வேளைகளில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக இரண்டு பாரவூர்திகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் தர்மபுர பொலிஸார் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தடயப் பொருட்களை எதிர்வரும் 11 ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிஸா ர் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

61 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

66 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

51 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

73 0 0