உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 26.01.2026

ராசி பலன்கள் 8 மாதங்கள் முன்
72 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று சோம்பேறித்தனம் இல்லாமல் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சிந்தனை மேலோங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பக்குவம் இருக்கும். அறியாமல் செய்த சின்ன சின்ன தவறுகளை எண்ணி வருத்தப்படுவீர்கள். தவறுக்கு உண்டான பிராயசித்தத்தையும் தேடுவீர்கள். இறையருளால் இன்று நிறைய நல்லது நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று இலாபம் அதிகரிக்கும். வராத கடன் வசூல் ஆகும். வியாபாரத்திலிருந்து வந்த நஷ்டம், வேலையில் இருந்து வந்த நஷ்டங்கள் எல்லாம் சரியாகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சுப காரியங்கள் நடக்க தொடங்கும். கணவன் மனைவி புரிதல் அதிகரிக்கும். நிம்மதி கிடைக்கும் நாள் இன்று.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனதளவில் சந்தோஷம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் மனதிருப்தி அடைவீர்கள். இறை வழிபாடு செய்வதில், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறைகள் இன்று உங்களுக்கு நிறைய நிம்மதியை தரும். நீண்ட தூரப் பயணத்தின் போது கவனம் இருக்கட்டும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் எந்த பின்னடைவும் வராது. அடுத்தவர்களுடைய உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். குடும்பத்தோடு நேரத்தை அதிக நேரம் செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமையிலிருந்து தவற மாட்டீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உங்களுடைய நிதி நிலைமை சீராகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முடிவு தெளிவாக இருப்பீர்கள். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று சரியாக தீர்மானம் செய்வீர்கள். எதிரிகளிடமிருந்து விலகி இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். எதிர்கொள்ளும் மன தைரியம் உங்களிடம் வெளிப்படும் நல்லது நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் தேடிவரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்த படி நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நிறைய சம்பளத்தோடு அந்த வேலை கிடைப்பது இரட்டிப்பு சிறப்பு. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். பணிவுடன் நடந்து கொள்வீர்கள். பெயர் புகழ் அந்தஸ்து உயர்ந்தாலும், உங்களிடம் ஆர்ப்பாட்டம் வெளிப்படாது. இந்த பணிவு உங்களுக்கு வாழ்க்கையில் மென்மேலும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும். ஆர்ப்பாட்டம் இல்லாத சந்தோஷமான அமைதியான நாள் இன்று.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஆர்வம் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வியாபாரத்தில் தடை ஆக இருந்த விஷயங்கள் எல்லாம் இன்று முன்னேற்றத்தை கொடுக்கும். தடைகள் விலகும். கடின உழைப்புக்கு உண்டான வெற்றி உங்களைத் தேடி வரும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று குழப்பத்திலிருந்து விடுபடுவீர்கள். பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். சொத்துபத்திலிருந்து வந்த பிரச்சினைகள் விலகும். நீதிமன்ற வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்னச் சின்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை அமையும். பொறுமையாக நிதானத்தோடு நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீர்கள். அதிகம் பேசாதீர்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வராத கடன் வசூலாகும். உங்களுடைய நேர்மைக்கு சரியான பாராட்டும், சரியான சன்மானமும் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இந்த நாளை செலவு செய்வீர்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0