உந்துருளி மோதி ஒருவர் உயிரிழப்பு.!
ஹபரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபரணை – பொலன்னறுவை வீதியில் ஈரிகெஓய பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை உந்துருளி மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த 71 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
பொலன்னறுவை நோக்கி பயணித்த உந்துருளி வீதியைக் கடக்கும் பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் மற்றும் பாதசாரி தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பாதசாரி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.