உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 13 நிமிடங்கள் முன்
52 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (24) திங்கட்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தன்று நாங்கள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் எங்கள் துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் இந்த அரசாங்கத்துக்கும், எத்தனையோ அரசுகள் மாறி மாறி வந்த போதிலும் நாங்கள் தெரியப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது? இந்த உறவுகள் இருக்கிறார்களா? அல்லது அவர்கள் உயிருடன் இல்லையா? என்று சொல்லியே நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் கவனயீர்ப்பு போராட்டங்கள் நாங்கள் செய்து பார்த்தும் எங்களுக்கு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நாங்கள் சர்வதேச மாநாடு நடத்த தீர்மானித்திருக்கிறோம்.

எதிர்வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கத்தில் மாநாடு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

உறவுகளைத் தேடித் திரிந்த அம்மாக்கள், வலி சுமந்த இதயத்தோடு எல்லாம் மரணித்துப் போனார்கள். அவர்களுடைய புத்தகம் நாங்கள் வெளியிடுவதற்கு இருக்கிறோம். காணாமல் போன சிறுவர்கள், தொடர்பாகவும் அவர்களுடைய புத்தகம் வெளியிடுவதற்கு இருக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக 17 வருடம் நாங்கள் யார் யாருக்கு மகஜர் கையளித்தோம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாக நாங்கள் யார் யாரிடம் கதைத்தோம், எங்கெங்கே நின்று போராட்டம் செய்தோம், என்னென்ன நன்மைகள், தீமைகள் எங்களுக்கு கிடைத்தது என்பதையும் முன்னிட்டு அதற்கும் ஒரு புத்தகம் வெளியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.

வருகிற 30ஆம் திகதி உங்கள் அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு உண்டு . 17 ஆயிரம் உறவுகள் 8 மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அம்மாக்களும் மரணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இந்த முறை இந்த மகாநாட்டுக்கு அனைவரையும் நாங்கள் கை கூப்பி அழைக்கின்றோம்.

‘ஒவ்வொரு முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னெடுத்து வருகின்றோம். இந்த முறையும் நாங்கள் இந்த சர்வதேச தினத்தை முன்னிட்டு தான் இந்த மகாநாட்டை செய்கிறோம்.

இந்த முறையாவது இந்த சர்வதேச உலகம் கண்ணை திறந்து எங்களுக்கு வலிசுமந்த அம்மாக்களுக்கு கண்ணீரோடு இருக்கிற எங்கள் உறவுகளுக்கு ஒரு பதில் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் இந்த மாநாட்டை செய்கிறோம் என ‘அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

55 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

28 0 0