உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
23 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
128 பார்வைகள்

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை மற்றும் நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நீதித்துறையின் சுயாதீனம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்புகளை முன்கூட்டியே அறிவிப்பதும், குறிப்பிட்ட சிலரைக் கைது செய்யப்போவதாகக் கூறுவதும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையைக் கடுமையாகப் பாதித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். சட்டம் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதைத் தடுத்து, நீதித்துறைக்கான கௌரவத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விவரித்த நாமல் ராஜபக்ஷ , வாக்குறுதியளித்தபடி விவசாயிகளுக்கு உரங்களை சரியான நேரத்தில் விநியோகிக்கவோ, நெல்லுக்கு நியாயமான விலையைப் பெற்றுத்தரவோ அரசாங்கத்தால் முடியவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணம் மற்றும் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்களை முறையான திட்டமிடலின்றி செயற்படுத்துவதில் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாகத் தேவையற்ற மற்றும் முறைகேடான செயற்பாடுகளிலேயே கவனம் செலுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற விசாரணைகள் மற்றும் அறிக்கைகள் குறித்துக் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்றக் குழுக்கள் மற்றும் விசாரணைகள் குறிப்பிட்ட நபர்களை இலக்கு வைத்து பழிவாங்கும் நோக்கில் நடத்தப்படுவதாக அவர் சாட்டினார்.

வெளிப்படையான விசாரணை இன்றி, குறிப்பிட்ட சிலரைத் தப்பவைத்துவிட்டு ஏனையோரைப் பலிகடா ஆக்கும் போக்கை ஒருபோதும் ஏற்க முடியாது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

நாட்டில் நிலவும் எல்நினோ நிலைமை மற்றும் வறட்சி குறித்துப் பேசிய அவர், வறட்சியினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தும், அரசாங்கம் உரிய முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றார்.

குடிநீர் பற்றாக்குறை மற்றும் விவசாய நிலங்களுக்கான நீர் மேலாண்மை தொடர்பில் அரசாங்கம் காட்டிவரும் அலட்சியப் போக்கே தற்போதைய நெருக்கடிக்கு முதன்மை காரணம் என்றும், அரசாங்கம் தனது தவறுகளை மறைக்க பொய்ப் பிரசாரங்களை முன்னெடுப்பதை நிறுத்திவிட்டு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு.!

மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமையால், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அந்தவகையில், ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 500 ரூபாய்க்கும், பச்சை…

96 0 0
இலங்கை செய்திகள்

மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து திருட்டு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள் நுழைந்த சந்தேகநபரை நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸார் கைது செய்தனர்.…

103 0 0
இலங்கை செய்திகள்

வருமான வரித் திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது கோரிக்கைகளை முன்வைத்தும் அரச நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (23) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்…

120 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தில் 132 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் நிறைவடையவில்லை.!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தின் 281 மாகாணப் பாடசாலைகளில், 132 பாடசாலைகளின் புனரமைப்புப் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை எனக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எஞ்சிய பணிகளை நிறைவு…

113 0 0