உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

இலங்கை செய்திகள் 15 நிமிடங்கள் முன்
57 பார்வைகள்

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளதுடன், கொள்ளையிடப்பட்ட நகைகளையும் அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், கொள்ளையிடப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த நபர் கொள்ளையிட்ட ஒரு பகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளதுடன், ஒரு தொகுதி நகைகளை வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள பிரபல அடகு நிலையத்தில் அடகு வைக்கப்பட்டதையடுத்து, அவையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்கில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றமாம்; இப்படி கூறுகின்றார் ஆளுநர்.!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகளில் முன்னேற்றம் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், உயிர்கொல்லி போதைப்பொருள் கட்டுப்பாடு, மணல் மாபியாக்களின் செயற்பாடுகளைத் தடுப்பது மற்றும் வீதிகளில்…

54 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இருவர் கைது.!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, தேசிய மக்கள் சக்தியின் கொலன்னாவ நகரசபை உறுப்பினர் ஒருவரின் மகன் உட்பட இரு சந்தேகநபர்கள் கைது…

25 0 0
இலங்கை செய்திகள்

சமிந்த விஜேசிறி பிணையில் விடுவிப்பு.!

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

42 0 0
இலங்கை செய்திகள்

நாட்டின் பொருளாதாரம் மற்றும் நீதித்துறையின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலியுறுத்தல்.!

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கட்சியின் உப செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி சுரேன் ராகவன்,…

51 0 0