உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 8 மணி நேரம் முன்
76 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் 9ஆம் திகதி சாவகச்சேரி நகரில் உள்ள நகைக் கடை உரிமையாளரின் வீட்டில் இருந்து 17 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிசிடிவி காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், நவாலியைச் சேர்ந்த பிரதான சந்தேக நபர் நேற்று (22) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், கோப்பாய் பகுதியில் மூன்று வீடுகளிலும், வட்டுக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் தலா ஒரு வீட்டிலும் என மொத்தம் ஐந்து வீடுகளில் தங்க நகைகள் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

மேலும், ஊர்காவற்றுறையில் உள்ள வங்கி ஒன்றில் 43 பவுண் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு அந்த பணத்தில் சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொள்வனவு செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதான சந்தேக நபருக்கு உதவியதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பெண் ஒருவரும், நவாலியைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

72 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

71 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

81 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் கைப்பற்றல்.!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைத் தொகையுடன், இரண்டு டிங்கி படகுகளும், லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து நீர்கொழும்பு, வெல்ல வீதிய…

78 0 0