உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பிரதேச சபையின் காணியை கையகப்படுத்த இடமளிக்க முடியாது.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
21 பார்வைகள்

வேலணை பிரதேச சபைக்கு உரித்தான மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒரு தொகுதியான சுமார் 2.5 ஏக்கர் காணியை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தேவை கருதி கையகப்படுத்த யாழ். மாவட்ட செயலகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாதென தெரிவித்துள்ள வேலணை பிரதேச சபை, மத்திய அரசின் தூதுவராக செயற்படும் மாவட்ட செயலகத்தின் இந்த செயற்பாடு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் வேலணை பிரதேச சபைக்கு 15.01.2026 ஆம் நாளன்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறி யாழ். மாவட்ட செயலகத்தால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,
15.01.2026 ஆம் தியதியன்று மாவட்ட செயலகத்தில் நடந்த கலந்துரையாடலின் பிரகாரம் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 2.5 ஏக்கர் அரச காணியை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கோரி வருவதால் குறித்த காணியில் எதிர்வரும் காலங்களில் எதுவித அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் சபைக்கு தவிசாளர் தெரியப்படுத்தி கருத்துக் கூறுகையில்,
வேலணை பிரதேச சபையானது ஒரு வருமானம் குறைந்த சபையாக இருக்கின்றது. நாம் சர்வதேச மைதானத்தை வரவேற்கின்றோம். அதே நேரம் எம்மிடம் இருக்கும் வளங்கள் முழுவதையும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் கொடுக்க முடியாது.

குறித்த காணி மைதானம் அமையும் சூழலில் இருப்பதால் அக்காணியில் பிரதேச சபை எதிர்காலத்தில் தனக்கான பெரும் வருமானம் ஈட்டும் வளமாக பயன்படுத்த முடியும்.

இதே நேரம் மைதானத்துக்கு தேவையானளவு காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டமும் நடைபெறுகின்றது.

இந்நிலையில் ஆடம்பர விடுதிகள் மற்றம் பராமரிப்பு குடியிருப்புக்கள் உள்ளிட்ட இதர நோக்கங்களுக்காகவே காணி கோரப்படுகின்றது.

ஒரு வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கும் எமது சபை எதிர்காலத்தில் அந்த நிலப்பரப்பை மையமாக வைத்தே பாரியளவு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே இந்த செயலை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

இது எமக்குரிய காணி. எதிர்காலத்தில் பிரதேச சபையின் வருமான ஈட்டலுக்குரிய மூலதனமாக இருக்கின்றது. எனவே வேலணை பிரதேச சபைக்கு உரித்தான காணி என்பதால் சபையின் எதிர்கால நலன்கருதி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறுத்த காணியை நாம் வேறு ஒருவருக்கு வழங்கும் நிலையில் நாம் இல்லை. அது பிரேரணையாக முன்மொழிந்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

46 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

57 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0