உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 23.01.2026

ராசி பலன்கள் 9 மாதங்கள் முன்
49 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு இருப்பீர்கள். எடுக்கும் முடிவில் இருந்து மாற மாட்டீர்கள். தெளிவான பேச்சும் சிந்தனையும் உங்களை இன்று தைரியத்தோடு செயல்பட வைக்கும். பெரிய அளவில் இருந்த பிரச்சினைகளை எல்லாம் கூட தைரியத்தோடு எதிர்கொள்வீர்கள். இந்த நாள் தைரியம் வெளிப்படும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வருமானம் பெருகும். கடன் சுமை நீங்கும். உங்களுக்கும் வீட்டிற்கும் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. பயணங்கள் இனிதே அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன உளைச்சல் இருக்கும். ரொம்ப நம்பியவர்கள் உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இன்று எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் யார் மீதும் வைக்காமல் இருப்பதே நல்லது. மற்றபடி வேலை வியாபாரத்தில் எல்லாம் எப்போதும் போல கவனத்தோடு செயல்படுங்கள். நல்லது நடக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். நேரத்தை வீணடிக்காதீர்கள். உங்களுக்கான கடமைகளை குறித்த நேரத்திற்கு முன்பாகவே முடிப்பது நல்லது. நீண்ட தூரப் பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக பேசுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கு நீங்களே தைரியம் சொல்லிக் கொள்வீர்கள். எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறன் உங்களிடத்தில் இருந்து வெளிப்படும். வேலையிலும் வியாபாரத்திலும் கஷ்டம் வந்தாலும் அதை இன்று எதிர்த்துப் போராடி வெற்றியடைவீர்கள் கவலைப்படாதீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. உற்சாகத்தோடு இந்த நாள் தொடங்கும். உற்சாகத்தோடு இந்த நாள் நிறைவடையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சமூகமான நாளாக இருக்கும். சந்தோஷமான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உடன் பிறந்தவர்களோடு சின்னச் சின்ன சண்டை வருவதற்கு, சின்ன வாய்ப்பு இருக்கிறது. குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லதே நடக்கும். நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். மனநிறைவோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள். மனதிற்கு பிடித்த நபர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். கல்யாணம் கைகூடி வரும். சுப செலவுகள் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஓய்வு எடுக்க வேண்டும். ரொம்பவும் அலைச்சல் நிறைந்த வேலையை இன்று செய்ய வேண்டாம். தேவையில்லாத பிரச்சினையில் தலையிட வேண்டாம். எதிரிகளிடமிருந்து விலகி இருப்பது நல்லது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் நிறைய தண்ணீர் குடித்து உணவு பழக்கவழக்கத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது அவசியம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணிவு வெளிப்படும். உங்களுக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்தாலும், நீங்கள் எந்த உயரத்திற்குச் சென்றாலும், உங்கள் நிலை தடுமாறாது என்று நிரூபிப்பீர்கள். நன்றிக் கடனோடு நடந்து கொள்வீர்கள். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இன்று.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நேர்மையாக நடந்து கொள்வீர்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும், உங்களை விலை கொடுத்து வாங்க முடியாது. அந்த நேர்மையே உங்களுடைய எதிர்காலத்தில் பல நன்மைகளை செய்யப் போகிறது. நல்ல பெயர் கிடைக்கும் நாள். வாழ்க்கையின் அர்த்தத்தை உணரக்கூடிய நாள் இன்று.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாசம் வெளிப்படும். அன்பு வெளிப்படும். சுற்றி இருக்கக்கூடிய நண்பர்களின் அருமை பெருமைகளை புரிந்து கொள்வீர்கள். உறவுகளுடைய அருமை புரியும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும், பெரிதாக பாதிப்புகள் இல்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0