உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலான நிகழ்வு அல்ல! பிரதமர் ஹரிணி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
23 பார்வைகள்

தீர்மானங்களை எடுக்கும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானதொரு நிகழ்வு அல்லவென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி உலகப் பெண் மாளிகையில் நடைபெற்ற ‘World Woman Davos Agenda 2026’ நிகழ்வில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அது பாலின அடிப்படையில் உருவாக்கப்பட்ட அதிகாரப் படிநிலைகளின் விளைவாகும்.

பெண்கள் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு, நிறுவன மற்றும் அதிகாரப் பகிர்வு கட்டமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்க வேண்டுமானால், நிறுவனங்களின் கட்டமைப்பு மற்றும் அதிகாரப் பகிர்வு முறையில் பெரும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.உலகளவில் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் துறைகளில் பெண்கள் முன்னணியில் இருந்தாலும், அவர்களின் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறையிலான பங்களிப்புகள் இன்னும் சமூகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் துறையில் நுழையும் பெண்கள் சந்திக்கும் சவால்கள் குறித்துப் பேசிய பிரதமர், பெண்கள் தீர்மானங்களை எடுக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படுவது, நீண்டகாலமாக நிலவும் பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலையின் முடிவாகும் எனத் தெரிவித்தார்.

அரசியல் களத்திலுள்ள பெண்கள் துன்புறுத்தல்கள், அவதூறுகள் மற்றும் ஒரங்கட்டப்படுதல் போன்ற தாக்குதல்களுக்கு உள்ளாவதால், அவர்கள் தலைமைத்துவத்திலிருந்து விலகும் நிலை ஏற்படுகிறது.

இது வெறும் பாதுகாப்பு தொடர்பான விடயம் மட்டுமல்ல் பெண்கள் தங்களின் சுதந்திரம் மற்றும் அதிகாரத்துடன் செயல்படக்கூடிய சூழலை உருவாக்குவது அவசியமாகும்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை ஒரு முன்னுதாரணமாகக் குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய, மக்களின் நெகிழ்ச்சித்தன்மையும் அரசியல் அர்ப்பணிப்பும் இணையும் போது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சான்று எனச் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ், வரலாற்றில் முதல்முறையாக 20 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றம் என அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தலைமைத்துவம் என்பது வெறும் பதவிகளில் அமர்வது மட்டுமல்ல, அது தற்போதுள்ள அமைப்புகளை மறுசீரமைப்பதாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

46 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

56 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0