கசிப்புடன் ஒருவர் கைது.!
நேற்று இரவு (21)சாமி மலை பகுதியில் உள்ள ஸ்ரஸ்பி தோட்ட தெய்வகந்தை பிரிவில் உள்ள வன பகுதியில் 210 லீற்றர் கசிப்புடன் ஒருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் .எஸ் .புஷ்பகுமாரவின் வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் நேற்று இரவு இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது 210 லீற்றர் சட்டவிரோதமாக காய்ச்சப்பட்ட கசிப்புடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும் புதன்கிழமை 28 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பணித்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவை இனிவரும் காலங்களில் போதைப்பொருள் இல்லாத பிரதேசமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
