உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 22.01.2026

ராசி பலன்கள் 9 மாதங்கள் முன்
61 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும் நாளாக இருந்தாலும், சுய நலத்தோடு சிந்திப்பீர்கள். எதிலும் ஆதாயம் இல்லாமல் செயல்பட மாட்டீர்கள். இந்த நாள் நிறைய நல்ல விஷயங்களையும் எதிர்மறையான விஷயங்களை உங்களுக்கு கற்றுத் தரப் போகிறது. கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மைகள் நடக்கும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றத்தோடு செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும் நாள். உறவுகளோடு இருந்து வந்த கசப்பு நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று குழப்பங்கள் தெளிவு பெறும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம். நீண்ட நாள் சந்தேகங்கள் உங்கள் மனதை விட்டு நீங்கும். மனம் விட்டு பேசுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினையில் இருந்து விடுபட்டு, மன நிம்மதியை அடைவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சாந்தமான பொறுமையான நாளாக இருக்கும். பிரச்சினைகள் பல வந்தாலும் அதை எப்படி சமாளிப்பது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தக்கூடிய நாள் இன்று. நல்லது நடக்கும் நாள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவுகள் நண்பர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மனதிற்கு பிடித்த ஒரு பொருளை இழப்பதற்கு வாய்ப்புகள் இருக்கு. நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்வதும் நல்லது. தவிர்க்க முடியாத பயணம் என்றால் கூடுதல் கவனம் இருக்கட்டும். வார்த்தையில் நிதானம் இருக்கட்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தக்க சமயத்தில் உதவி கிடைக்கும் நாளாக இருக்கும். பல நாள் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். நீண்ட நாள் மனக்கசப்பு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் முயற்சி தேவை. நேரத்தை வீணடிக்கக் கூடாது.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தவிர்க்க முடியாத விஷயத்திற்கு மட்டும் கடன் வாங்குங்கள். அனாவசிய செலவை குறைப்பது நல்லது. ஆடம்பர வாழ்க்கை வேண்டாம். தேவையில்லாத உறவுகள் நண்பர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். எதிர்பார்த்தது நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். வீட்டில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த சோம்பேறித்தனம் நீங்கும். சுறுசுறுப்பு கிடைக்கும். நல்ல பெயர் வாங்குவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாணவர்களுக்கு, கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாள். வேலையிலும் வியாபாரத்திலும் பின்தங்கி இருந்தவர்கள், முன்னேற்ற நிலையை அடைவீர்கள். வண்டி வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லது நடக்கும். பிரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சின்ன மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும் போது கவனமாக செயல்படுங்கள். நம்பிக்கைக்குரியவர்களின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டும். அடுத்தவர்கள் பேச்சை உதாசீனப்படுத்தக் கூடாது. ஜாக்கிரதை.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு செயல்படுவீர்கள். எடுக்கும் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசும் உங்களுடைய பேச்சு அடுத்தவர்களுக்கு பிரச்சினையாக இருந்தாலும், பிரச்சினைக்கு உண்டான சரியான தீர்வை கொடுக்கும். எல்லோருக்கும் நல்ல முன் உதாரணமாக இருந்து இந்த நாள் இனிதே நிறைவடையும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0