உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 20.01.2026

ராசி பலன்கள் 9 மாதங்கள் முன்
54 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு மட்டும் சாதகமாக இருக்காது. உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை தரும் வகையில் அமையும். பொதுநலத்தோடு நடந்து கொள்வீர்கள். சுயநலம் இல்லாத நாள் இன்று. உங்களுக்கு மன நிம்மதியை தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகமான நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். குறிப்பாக முதியவர்களுக்கு இந்த நாள் நல்ல சந்தோஷத்தை கொடுக்கும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். தேவையில்லாத நட்பு உங்களை விட்டு விலகும். நிதிநிலைமை சீராகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று அடக்கம் வெளிப்படும். பேசுவதில் நிதானம் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் பொறுமையாக சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய அமைதி இன்று உங்களுக்கு ஆர்பாட்டம் இல்லாத வெற்றியை தேடி தரப் போகிறது. பெரியவர்களின் ஆதரவு நண்பர்களின் ஆதரவு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். உங்களுக்கான வேலைகளை எப்படி செய்ய போகின்றோம் என்ற டென்ஷன் அதிகரிக்கும். ஆனால் கவலைப்பட வேண்டாம். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். இறைவழிபாடு செய்யுங்கள். மனதை அலைபாய விடாதீர்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும் பாருங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத வரவு எதிர்பாராத பரிசு கிடைக்கும். மனது சந்தோஷமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கிறது. சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலையிலிருந்து வந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். ஆசைகளை வெளிப்படுத்தக்கூடிய நாளாக இருக்கும். காதல் வெளிப்படும். திருமணம் வரை செல்லும். வீட்டிற்கு தேவையான பொருட்கள், உங்கள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும் நாள் இன்று.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்க்கைதான். சுகபோகமான இந்த நாளை அனுபவிக்க போகிறீர்கள். செல்லும் இடமெல்லாம் மதிப்பும் மரியாதையும் கூடும். கௌரவம் உயரும். அந்தஸ்து உயரும். சேமிப்பை உயர்த்துவதற்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். நிறைய செலவு செய்யக்கூடாது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீர்கள். நீண்ட தூரப் பயணங்கள், அலைச்சலை தவிர்த்துக் கொள்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தன இலாபம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். வராத கடன் வசூல் ஆகும். உங்களுடைய கடன் சுமை குறையும். அடமானத்தில் வைத்திருந்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வாய்ப்புகள் வரும். லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள் இன்று.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். எதிலும் தெளிவாக சிந்திப்பீர்கள். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் இருக்கும் நாள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தெளிவாக சிந்திப்பீர்கள். பிரச்சினைக்கு உண்டான தீர்வை சரியாக மேற்கொள்வீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். தேவைக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் சில பேருக்கு உண்டாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0