உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 16.01.2026

ராசி பலன்கள் 9 மாதங்கள் முன்
48 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திறமையான நாளாக இருக்கும். நடந்த நல்ல விஷயங்களை எல்லாம் மனதிற்கு பிடித்தவர்களிடம் சொல்லி சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். வேலையில் சின்னச் சின்ன தொல்லை தொலைபேசியில் மூலம் வர வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று மனக்கவலை இருக்கும். பண்டிகையை எல்லாம் நன்றாக கொண்டாடி முடித்த பிறகும் ஏதோ ஒரு குறை வெளிப்படும். இறைவழிபாடு செய்யுங்கள். மனதிற்கு பிடித்தவர்களோடு கொஞ்ச நேரம் பேசுங்கள். நல்லதே நடக்கும். கவனக்குறைவாக எந்த வேலையும் கையில் எடுக்க வேண்டாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும் நாளாக இருக்கும். எதிலும் திறமையாக செயல்படுவீர்கள். உங்கள் கையில் கொடுத்த வேலையை சரியான நேரத்திற்கு முடித்துக் கொடுப்பீர்கள். கணவன் மனைவி உறவு பலப்படும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று துணிவு வெளிப்படும் நாளாக இருக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். வேலையில் ஆர்வம் காட்டுவீர்கள். நன்றிக் கடனோடு இருக்க வேண்டும் என்று யோசிப்பீர்கள். நன்றிகடனை, உதவியாக திரும்பவும் செய்து விடுவீர்கள். மனநிறைவை அடைவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வராத கடன் வசூலாகும். நிதிநிலைமை சீராக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மன உறுதியோடு இருப்பீர்கள். நினைத்த காரியத்தை சரியாக செய்து முடிப்பீர்கள். உற்சாகத்தில் ஒரு துளியும் குறைவு இருக்காது. மன நிம்மதி கிடைக்கும். கடன் சுமை குறையும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்ப்பு கொஞ்சம் இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அடுத்தவர்களுக்கு சாதகமாக அமையாது. சின்னச் சின்ன வேலைகளை செய்யும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். முன்கோபம் வேண்டாம். அடுத்தவர்களை குறை கூற வேண்டாம். நேர்மையிலிருந்து விலகாமல் நடந்து கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தன இலாபம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். எதிரிகளால் இருந்து வந்த தொல்லை விலகும். பகை கூட நட்பாக மாறிவிடும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சில பேர் நீண்ட தூரப் பயணத்தின் போது மனதிருப்தியை அடைவீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பாராத வரவு இருக்கும். எதிர்பாராத பரிசு கிடைக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தோட நேரத்தை செலவு செய்தீர்கள். நீண்ட தூரப் பயணங்களால் மனது சந்தோஷம் அடையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிதானம் தேவை. முன்கோபடக்கூடாது. அடுத்தவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடாது. பகைமையை உருவாக்க வேண்டாம். இருக்கும் பகையை சரி செய்ய என்ன வழி இருக்கிறது. அதை பின்பற்றுங்கள் நல்லதே நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாராட்டுக்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகம் பிறக்கும். நிதி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

51 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0