உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

பல வருடங்களுக்கு பின்பு மீண்டும் சந்தித்துக்கொண்ட ராமராஜன் – கனகா.!

சினிமா 7 மாதங்கள் முன்
22 பார்வைகள்

1989ஆம் ஆண்டு இயக்குநர் கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவாகி வெளிவந்த படம் கரகாட்டக்காரன்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிகை கனகா அறிமுகமானார்.

இவர் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். தனது மகள் படம் நடிப்பதில் அவருக்கு பெரிதும் விருப்பம் இல்லை என்றாலும், அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.ஆனால், கனகா நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

குறிப்பாக ராமராஜன் – கனகா ஜோடியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். டாப் நடிகையாக 80ஸ்-களில் வலம் வந்த கனகா திடீரென சினிமாவிலிருந்து விலகியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

அவர் என்ன ஆனார் என்பதே பலருக்கும் தெரியவில்லை.இதன்பின், பல வருடங்களுக்கு பின் பிரபல நடிகை குட்டி பத்மினி நடிகை கனகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.

கரகாட்டக்காரன் பட கதாநாயகி கனகாவா இது என பலரும் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.இந்த நிலையில், தற்போது நடிகர் ராமராஜனுடன் நடிகை கனகா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், கரகாட்டக்காரன் ஜோடி ரீ யூனியன் என புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

கவர்ச்சி நடனங்களுக்கு மட்டுமே என்னை அணுகுகின்றனர் – தமன்னா ஆதங்கம்!

திரைத்துறையில் சவால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்க தான் ஆர்வமாக இருப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார். இருப்பினும், பெரும்பாலான இயக்குநர்கள் தன்னை ‘ஐட்டம் பாடல்களுக்கு’ மட்டுமே அணுகுவதாக அவர்…

65 0 0
சினிமா

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் துருவ் விக்ரம் பதில்!

சமீபகாலமாக தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் மற்றும் மக்களின் அதிகப்படியான கவனம் குறித்து நடிகர் துருவ் விக்ரம் மனம் திறந்து பேசியுள்ளார். ‘பைசன்’ படத்…

69 0 0
சினிமா

அனிருத்துக்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம்?

பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) கிரிக்கெட் அணியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான (CEO) காவ்யா மாறனுக்கும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி திருமணம்…

75 0 0
சினிமா

ரெயில்வே பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய நடிகை கைது!

மஹராஷ்டிராவில் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணிப்பது தொடர்பான மோதலில், ரயில்வே பாதுகாப்புப் படை பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய, நடிகை அந்தரா பானர்ஜியை, பொலிஸார் கைது செய்தனர்.…

80 0 0