கமலின் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த தடை.!
நடிகர் கமல்ஹாசன் அவரது பெயர், புகைப்படம், குரல், உலகநாயகன் எனும் பட்டத்தையும் அனுமதியில்லாமல் வணிக ரீதியாக பயன்படுத்துவமற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நிறுவனமொன்று அனுமதியின்றி கமலின் புகைப்படங்கள் மற்றும் வசனங்களைப் பயன்படுத்தியதன் பின்னரே நடிகர் கமல் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்கள் ஆகியவற்றை வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது