உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

குப்பைக்கான வரி எடுக்காதே!” – மலையகத்தில் ஆர்ப்பாட்டம்.

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
71 பார்வைகள்

நுவரெலியா, பொகவந்தலாவை நகரில் காணப்படும் குப்பைகளைச் சேகரிக்க நோர்வூட் பிரதேச சபை அதிக வரி அறவிடுதாகத் தெரிவித்து பொகவந்தலாவை வர்த்தகர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பொகவந்தலாவை வர்த்தக நிலையங்களில் உள்ள அனைத்து வர்த்த நிலையங்களையும் மூடி இந்த ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

இதில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர். ஒரு மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.பொகவந்தலாவை பஸ்  நிலையத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் பிரதான நகரம் ஊடாக செல்வகந்த சந்தி வரை சென்று மீண்டும் பேரணியாக பொகவந்தலாவை தண்டாயுதபாணி ஆலயம் முன்பாக வந்தடைந்தது.

பொகவந்தலாவை நகரப் பகுதியில் நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை நோர்வூட் பிரதேச சபை சேகரிப்பதற்கு அதிகூடிய வரியைக் கோருவதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.

“நகரப் பகுதியில் உள்ள சேகரிக்கப்படும் குப்பைகளுக்கும் நாம் பெறும் தண்ணீருக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கு நாங்கள் வருடா வருடம் வரிப்பணம் செலுத்தி வருகின்றோம். தற்போது பொகவந்தலாவை நகரில் குவியும் குப்பைகளைச் சேகரிக்க நாளாந்தம் 200 ரூபாவை மேலும் செலுத்துமாறு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கோருகின்றார். ஆனால், நாம் ஒருபோதும் குப்பைக்கான வரிப்பணத்தைச் செலுத்தப்போவதில்லை.” – என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

“எமது பிரச்சினைகள் தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.“எடுக்காதே எடுக்காதே குப்பைக்கான வரி எடுக்காதே”, “கட்டமாட்டோம் கட்டமாட்டோம் குப்பைக்கான வரியைக் கட்டமாட்டோம்”, “நாங்கள் செலுத்தும் வரிக்கு என்ன பயன்”, “மேலும் ஒரு வரிச் சுமையா குப்பைக்கு” போன்ற பாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

52 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

46 0 0
இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

45 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

52 0 0