குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!
அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இராஜங்கனை, சாலியபுர பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 51 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையே வயல் காணி தொடர்பாக நீண்டகாலமாக நிலவிவந்த தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாகும் என்பது முதற்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் 20 முதல் 55 வயதுக்குட்பட்ட 6 ஆண்களும் ஒரு பெண்ணும் உட்பட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து இராஜங்கனைப் பொலிஸ் நிலையக் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.