உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
47 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் ஷிராந்தி ராஜபக்ஷ பாதுகாப்பான தனிப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக பல்லேதென்ன தெரிவித்தார்.

அரச வங்கியொன்றிலிருந்து பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாய் நிதியைத் துஷ்பிரயோகம் செய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரில், இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் அவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வட மாகாண பனை வடிசாலைகளின் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு!

வட மாகாணத்தில் பனைசார் உற்பத்தித் துறையைப் பாதிக்கும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணங்களை மீளாய்வு செய்து, உற்பத்தியாளர்களுக்கு சாதகமான தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. யாழ்ப்பாண…

67 0 0
இலங்கை செய்திகள்

இலங்கையில் உயரடுக்கு அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி : சமீர பெரேரா கருத்து

இலங்கையின் அரசியல் வரலாற்றில் நேற்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்‌கப்பட்டுள்ளதாகவும், நாட்டில் நிலவிவந்த உயரடுக்கு அரசியல் கலாசாரம் இதன் மூலம் முற்றாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் ‘ஜனநாயகத்திற்கான சிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

புதிய மதுபானசாலை அனுமதிக்கு எதிராக கொதித்தெழுந்த வலிகாமம் வடக்கு மக்கள்.!

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் கருதப்படும் வலிகாமம் வடக்குப் பகுதியில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.…

48 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

54 0 0