உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
74 பார்வைகள்

சுமார் 24 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்கள் காத்தான்குடி பொலிஸாரினால் நேற்றிரவு(5) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் மற்றும் 10 கிராம் ஹிரோயின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கொழும்பிலிருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து கல்லடியில் உள்ள விடுதியொன்றில் வைத்து விற்பனை செய்து வரும் குறித்த நபர்கள் பிரபல போதை வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

கல்லடியிலிருந்து சம்மாந்துறைக்கு குறித்த போதைப்பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில் பொலிஸாரினால் இவர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

போதைப்பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் 26 மற்றும் 29 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

53 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

51 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

30 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0