உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
31 பார்வைகள்

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் அலுவலகத்தின் விசேட பொலிஸ் குழுவினர் இன்று (08) அதிகாலை கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டின்சின் பகுதியில் உள்ள கெசல்கமுவ ஓயா சுற்றுச் சூழலை அழித்து, அக்காப்பிற்கு அருகில் செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பியிலிருந்து சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று வளி அமுக்கக் கருவி மூலம் காற்றை உட்செலுத்தி, ஆற்றுப் படுக்கையிலும் கரையோரப் பகுதிகளிலும் இவர்கள் இம்மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சட்டவிரோத நடவடிக்கை குறித்து நுவரெலியா பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சந்திரகுமாரவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பேரில், நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவொன்று பொகவந்தலாவை பகுதிக்கு அனுப்பப்பட்டு இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கைக்காக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

சந்தேகநபர்கள் மாணிக்கக்கல் அகழ்விற்கு உளவு பார்ப்பதற்கு பயன்படுத்திய இரண்டு முச்சக்கர வண்டிகளும், அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் இரத்தினபுரி, பொகவந்தலாவை மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் எனச் சோதனையை நடத்திய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று (08) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

54 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

52 0 0