உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

இலங்கை செய்திகள் 51 நிமிடங்கள் முன்
53 பார்வைகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில் குறிப்பிடும் கலாச்சாரம் சமீப காலமாகப் பின்பற்றப்படுவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கண்டனம் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் நிலையியல் கட்டளை 27(2) இன் கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளின்போதே அவர் இதனைக் கூறினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கலாச்சார அடையாளங்களைப் பாதுகாக்கும் வகையில் மாகாண அடிப்படையிலான பாரம்பரியங்கள் பின்பற்றப்பட வேண்டும் என்றும், ஹோட்டல்களில் ‘வணக்கம்’ என்ற வரவேற்பு முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2018 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை, தங்கும் காலம், வருவாய் விவரங்கள், வடக்கு, கிழக்கில் சுற்றுலா மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுச் செலவிடப்பட்ட தொகைகள் மற்றும் தொல்பொருள் தளங்களுக்குச் செலவிடப்பட்ட நிதி குறித்த விவரங்களை அவர் கோரினார்.

சுற்றுலாத் தங்குமிட நிறுவனங்களின் பதிவு நிலை, அறைக்கொள்ளளவு, சுற்றுலா மேம்பாட்டு வரிச் செலுத்துகை மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பு போன்ற விடயங்கள் குறித்து அரசு தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

சுற்றுலா அபிவிருத்தியின் ஊடாகக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சதவீதம் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படாமையால், ஹோட்டல்கள் தமது வருமானத்தின் ஒரு பகுதியைப் பிரதேச சபைகளுக்குச் செலுத்தவில்லை எனவும், இது குறித்து அரசாங்க நிதி பற்றிய குழு ஊடாகக் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துகளுக்குப் பதிலளித்த வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், “ஆயுபோவன்” என்று குறிப்பிடுவதைப் போன்று வணக்கம் என்று குறிப்பிடுவதும் நல்லதே. அதனை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். குறித்த இடங்களில் ‘வணக்கம்’ என்று குறிப்பிடுமாறு நாம் அறிவுறுத்துவோம். காலை வணக்கம், மாலை வணக்கம் என்று வரவேற்பது நல்லதே, எனக்கும் அதுவே விருப்பம்” என்று தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விசேட பாதுகாப்புடன் சிறையில் ஷிராந்தி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிராந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடை மகசின்…

0 0 0
இலங்கை செய்திகள்

குடும்பஸ்தர் கொ**லை; பெண் உட்பட 7 பேர் கைது.!

அனுராதபுரம், இராஜங்கனைப் பகுதியில் காணித் தகராறு காரணமாகக் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இராஜங்கனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாயா 15 பகுதியில் நேற்று…

49 0 0
இலங்கை செய்திகள்

பௌத்த சமூகத்தின் மீது மறைமுகத் தாக்குதல்.!

சிங்கள பௌத்த சமூகத்தின் மீது அரசு மேற்கொண்டுவரும் மறைமுகத் தாக்குதல்களுக்கு எதிராக மகா சங்கத்தினர் அனைவரும் அரசியல் பேதங்களைக் கடந்து ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய மக்கள்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

54 0 0