மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவை, அவரது கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
‘சிரிலிய சவிய’ நிதியத்துடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஷிராந்தி ராஜபக்ஷ, சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் விசேட பாதுகாப்பான தனிப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.