உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

யாழில் சட்டவிரோதமாக மதுபானத்தை கொண்டு சென்றவர் கைது.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
61 பார்வைகள்

சட்டவிரோதமாக வியாபாரத்தை முன்னெடுக்கும் நோக்குடன் இரகசியமான முறையில் கொண்டுசென்ற 13 போத்தல் மதுபானத்துடன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் துறைமுக பகுதியில் நேற்று (5) இடம்பெற்றதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த மதுபானத்தை எடுத்துச் சென்ற நபர் மது போதையில் வாகனத்தை செலுத்தி வந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் இருவேறு குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேநேரம் அரச மதுபான வரையறையை விட அதிக மதுபான போத்தல்களை மேலதிகமாக கொண்டுசெல்ல குறித்த நபர் முற்பட்டுள்ளதாகவும், குறித்த மதுசாரம் அனலைதீவில் சட்டவிரோத வியாபார நடவடிக்கைக்காகவே கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் தீவக பகுதியில் அரச அனுமதி பெற்ற மதுபானங்கள் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதைக்கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது அமைப்புகளும் பிரதேச சபை உறுப்பினர்களும் வலியுறுத்தி வந்த நிலையில் இன்று குறித்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மனைவியைப் பார்வையிட சிறைக்கு ஓடிய மஹிந்த.!

இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி…

53 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு, கிழக்கில் ‘ஆயுபோவன்’ வரவேற்புக்கு இனி இடமில்லை.!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ எனச் சிங்கள மொழியில்…

52 0 0
இலங்கை செய்திகள்

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கைது.!

கெசல்கமுவ ஓயாவில், ஆற்றுப் படுக்கையில் இருந்த மாணிக்கக்கல் அடங்கிய மண் படிமங்களைச் சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்த எட்டுப் பேர் கொண்ட கும்பலொன்றை நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர்…

30 0 0
இலங்கை செய்திகள்

ஞானசார தேரரின் சீவரம் களையப்பட்ட விவகாரம், ஷிரந்தி ராஜபக்ஷவின் கைதுக்கு எதிராக கண்டனம்.!

வணக்கத்திற்குரிய ஞானசார தேரரின் சீவரத்தை களைந்து, அவரை சிவில் உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பில் சமூகத்தில் கடுமையான விவாதம் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும்,…

54 0 0