உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

இன்றைய ராசி பலன்கள் – 03.01.2026

ராசி பலன்கள் 8 மாதங்கள் முன்
24 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று மன நிம்மதியோடு இருப்பீர்கள். பலதரப்பட்ட பிரச்சினையிலிருந்து வெளி வருவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்து டென்ஷன் குறையும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்பு நீங்கும். இந்த நாள் இனிய நாளாகவே இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அனாவசியமாக அடுத்தவர்களிடம் பேச வேண்டாம். வாக்குவாதம் செய்யவேண்டாம். கோபப்பட வேண்டாம். தேவையில்லாத எதிர்ப்புகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. பொறுமையை கடைப்பிடிக்கவும். இறைவழிபாடு செய்யவும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். இலாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன வருத்தம் இருக்கும். துன்பங்களை எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். அதற்காக மனது உடைந்து போய், அப்படியே உட்கார்ந்து விடக்கூடாது. எதையும் கடந்து வரக்கூடிய பக்குவம் உங்களிடத்தில் இருக்கு. அதை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். இறைவன் உங்களுக்கு துணையாக இருப்பான்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் நடக்கும். தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாக வெளிவந்து விடுவீர்கள். வீண்பழி உங்கள் மீது இருந்ததெல்லாம் விலகி விடும். மன நிம்மதி கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மறதியால் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட வேண்டும். உங்களுடைய வேலைகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். முக்கியமான விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். உடல் உபாதைகள் ஏற்படும். அசதி ஏற்படும். ஆகவே அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். நீண்ட தூரப் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. அப்படியே பயணம் செய்யக்கூடிய கட்டாயம் வந்தாலும் நிறைய தண்ணீர் குடியுங்கள். கவனமாக இருங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தலைநிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமையான நாளாக இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். நீங்களும் பெரிய மனிதர்களின் வரிசையில் இடம் பிடிப்பீர்கள். அவமானப்பட்ட இடத்தில் எல்லாம் உங்களுடைய பெயர் கொடிகட்டி பறக்கப்போகிறது. சந்தோஷத்திற்கு அளவிருக்காது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனதிருப்பி அடைவீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். சந்தோஷம் பிறக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும்‌. அதிகம் பேசக்கூடாது. உங்களுக்கு நடக்கக்கூடிய நன்மைகளை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது. கண் திருஷ்டியாலும் பிரச்சினைகள் வரலாம். நல்லது நடக்க இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லட்சுமி கடாட்சம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வீட்டில் தனம் தானியம் கொழிக்கும்.…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை இருக்கும். நேரத்திற்கு ஆரோக்கியமான சாப்பாடு, நல்ல தூக்கம், நல்ல ஓய்வு என்று இந்த நாள், மகிழ்ச்சியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும்…

57 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 17.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். சில பல பிரச்சினைகள் வந்தாலும், அதை பொறுமையாக எதிர்கொள்வீர்கள். பிரச்சினைகளுக்கு உண்டான தீர்வை அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு…

73 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.08.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக உங்களுடைய வேலைகளை செய்து முடிப்பீர்கள். தேவைக்கு அதிகமாகவே அனுபவம் கிடைக்கும். வீட்டில் இருந்து வந்த பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு…

94 0 0