உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
24 செவ்வாய்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் உ**யிரிழப்பு; அதிகாலையில் நடந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 5 மணி நேரம் முன்
121 பார்வைகள்

அம்பாறை தமன பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தமன மொரகஹப்பள்ளம் (இல. 53/2) பகுதியைச் சேர்ந்த கே. இந்திராணி மல்லிகா என்ற பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த பெண் கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது வீட்டின் பின்புறம் நின்றிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. யானையின் தாக்குதலுக்கு இலக்கான அப்பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

கிராமத்தைச் சூழவுள்ள ‘நெல்லி கேளே’ வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியை உடைத்துக்கொண்டு இரவு வேளைகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதாகவும், அவ்வாறு வந்த யானையே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை – மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆரச்சி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்ன ஆகியோரின் மேற்பார்வையில் தமன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மனோஜ் அழகியவன்ன தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன், கிழக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலக்கவின் அறிவுறுத்தலின் பேரில், அம்பாறை மற்றும் தமனை வனஜீவராசிகள் கள அலுவலக உத்தியோகத்தர்களான கிஹன் நிர்மல மற்றும் பிரியந்த பத்மலால் ஆகியோரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

அம்பாறை செய்திகள்

அம்பாறையில் இருவேறு கோர விபத்துக்கள்; இளைஞன் உ**யிரிழப்பு.!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் நிந்தவூர் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற இருவேறு வீதி விபத்துக்களில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், கல்முனை, தரவை…

114 0 0
அம்பாறை செய்திகள்

வெளிநாட்டுத் துப்பாக்கிகள் மீட்பு.!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக்…

103 0 0
அம்பாறை செய்திகள்

போ*தைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் அவரது உதவியாளர்கள் கைது.!

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

136 0 0
அம்பாறை செய்திகள்

சாய்ந்தமருதில் புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு.!

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது கமு/ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை…

116 0 0