உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
25 புதன்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

23 மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பில் எச்சரிக்கை

இலங்கை செய்திகள் 40 நிமிடங்கள் முன்
8 பார்வைகள்

23 மாவட்டங்களுக்குப் பொருந்தும் வகையில் பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பொன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதற்கமைய அநுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, காலி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கும், நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மட்டக்களப்பு, மன்னார், கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, மொனராகலை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு செல்லுபடியாகும்.

இன்று (25) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும்.

இதன்படி, குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அத்திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மூடநம்பிக்கை, சாதியப் பாகுபாடுகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் சரோஜா!

மூடநம்பிக்கைகள், சாதியப் பாகுபாடுகள் மற்றும் ஏனைய தீங்கு விளைவிக்கும் சமூக நடைமுறைகளை ஊக்குவிக்கும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, முன்மொழியப்பட்டுள்ள சமூக ஒழுக்கவியல் கட்டமைப்பின் ஊடாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத்…

35 0 0
இலங்கை செய்திகள்

மாகாண அதிகாரங்களைப் பறிக்க வேண்டாம் – நாடாளுமன்றத்தில் சத்தியலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்…!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சுகாதாரத் தேவைகளுக்கு விசேட நிதி ஒதுக்கீடு அவசியம் எனவும் மாகாண வைத்தியசாலைகளின் அதிகாரங்களைப் பறிக்க வேண்டாம் எனவும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்…

37 0 0
இலங்கை செய்திகள்

கோட்டாவுக்கு நீதிமன்றத்தில் இன்று இரட்டைப் பின்னடைவு!

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தனக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனுவைக் கொழும்பு…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி – வன்னேரிக்குளத்தில் மாவீரர்களின் பெற்றோரைக் கௌரவிப்பு!

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் விசேட நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. வன்னேரிக்குளம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின்…

34 0 0